Tuesday, November 27, 2012

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்




கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள் 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது. 

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். 

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு : 
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம். 

Administrator Password-ஐ மறந்து விட்டீர்களா ?அதனை Software பயன்படுத்தாமல் நீக்குதல்.


தனிநபர் கணக்கில் எவரும் நுழையாத  வண்ணம் Pass Word கொடுத்து பின்னர் அதனை மறந்து விடுகின்றனர் இதனை பின் வரும் வழி மூலம் Pass Word யை நீக்கிக் கொள்ளலாம்

.
1.கடவுச் சொல்லை நீக்க வேண்டிய கணணிலிருந்து  அதன் Hard Disk யை வேறாக்கி பிறிதொரு  கணினியில் இணையுங்கள்

2.இப்பொழுது கணணியை பூட் (Boot) செய்யவும். (இதன் போது கடவுச் சொல்
நீக்க வேண்டிய Hard Disk irandam நிலை  சாதனமாக இருக்க வேண்டும். secondary hard disk)

3.கணினி இயங்கியதும்  Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை Hard Disk ல்
Widows Operating System  install செய்திருக்கும் பகுதியை Open செய்யவும்.

4. அதனை தொடர்ந்து windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.

5.அங்கு காணப்படும் SAM.exe,SAM.log ஆகிய File களை
அழித்துவிடவும்.

இப்பொழுது அக் கணினிளிருந்து Hard Disk யை அகற்றி, Hard Disk பழய கணினியில்
இணைத்து இயக்கவும். முன்னைய Password Remove  செய்யப்பட்டு
கணினி சாதாரணமாக இயங்கும்.

கணணியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு




கணணியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் இனம் கண்டுவிட முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணணியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை இனம்கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும்.
ஆனால் சிலருக்கு இவ்வாறான Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு யோசிப்பார்கள். அவ்வாறானவர்கள் Run command விண்டோவை ஓப்பின் செய்து அதனுள் Regedit என டைப் செய்து Regedit விண்டோவை ஓப்பின் செய்ய வேண்டும்.
தொடர்ந்து தோன்றும் விண்டோவில் HKEY_CURRENT_USERControl PannelSound எனக் காணப்படும் போல்டரை திறந்து அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் valeஐ No என மாற்றி OK செய்யவும். இதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை உபயோகிக்க


நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்
முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி
பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.  கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால்.
AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும். Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.
இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.
பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.
இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.
பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்

அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் – 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.



அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.
அந்த கணினியை வலது கிளிக் செய்து  Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் – 12345@12345)  அதை இங்கே கொடுங்கள் முடிந்தது.
இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்
இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சாட் செய்ய முடியும்.
இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.
ஜிபிரிட்ஜ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் மூலமாக நிறைய பயன்கள் உண்டு நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.
ஜிபிரிட்ஜ் குறித்த விக்கிபீடியாவின் விரிவான பதிவு சுட்டி

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…  விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

டெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி


கணனியில் தமிழ் type செய்ய


NHM Writer என்ற தமிழ் மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

Click here to download NHM Tamil Writer 
உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

படி -->(1) Next  -->(2) I accept the agreement (Select) --> Next  -->(3) Next -->(4)(இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர்) Next --> (5)  Next --> (6) Next  என்ற பட்டனை கிளிக் செய்யவும். 

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.